கிரானைட் முறைகேடு வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக ஆதாரம் திரட்டி, சிறப்பாக செயலாற்றிய அதிகாரி மற்றும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என்று ஊழல் செய்யாத அரசு ஊழியரான ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்கள், தமிழகத்தின் பல லட்சகணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடல்.


புதுக்கோட்டையை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம், தமிழக அரசின் சிறிய துறைகளில் சிறப்பாக பணியாற்றி வந்து பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.


அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி மனு அளித்திருந்த போதும், அதுகுறித்து தமிழக அரசு எந்த முடிவு தெவிக்காமல் இருந்தது வந்தது.


இந்நிலையில் தமிழக அரசு , ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.