50 வயதான கள்ளக் காதலியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, காதலன் கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திரிபுரா மாநிலம் செபாஹிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த துலால் தாஸ், தனது மனைவி உடன் வசித்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால், அவர்களுக்குள் தொடர்ந்து சண்டைகள் அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் பிரிந்து சென்றனர்.

இதன் காரணமாக, தனிமையில் வசித்து வந்த துலால் தாஸ், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒரு விதவை பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இத்துடன், துலால் தாஸ்க்கு பாலியலில் தீராத ஆசை இருந்ததாகவும், வினோதமான ஆசைகளாக அது மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. இப்படியான நிலையில், 50 வயதான தனது கள்ளக் காதலியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய துலால் தாஸ், அதன் தொடர்ச்சியாக அவரை அவர் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்தது கள்ளக் காதலன் துலால் தாஸ் தான் என்பதனை போலீசார் கண்டுபிடித்தனர்.

அத்துடன், தலைமறைவாகவுள்ள கள்ளக் காதலன் துலால் தாஸை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், உதய்பூர் பகுதியில் துலால் தாஸ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர் பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீஸ் வந்திருப்பதை அறிந்த துலால் தாஸ், பயத்தில் வீட்டிற்குள் இருந்த படியே அங்கிருந்த விஷத்தை எடுத்துக் குடித்திருக்கிறார். 

இதனையடுத்து, அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார், விஷம் அருந்திய அவரை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அவருக்கு தற்போது தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்த படியே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்ததையும், அந்த பெண்ணை அவர் கொலை செய்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பான பணிகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.