15 வயது சிறுமியை 15 மணி நேரமாக 3 பணக்கார இளைஞர்கள் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து சம்பவம், கடும் அதிர்ச்சியையும், 
பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான நிலையில், அந்த சிறுமி எப்போதும் காலை நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான வயல் வெளிக்குச் சென்று பயிர்களின் விளைச்சலைப் பார்த்து விட்டு, அங்கேயே காலை கடன்களைக் கழித்து விட்டு வருவது வழக்கமாகக் கொண்டிருந்தார். 

சிறுமியின் இந்த அன்றாட செயல்பாடுகளை நோட்டமிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த 3 பணக்கார இளைஞர்கள், அந்த சிறுமியை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், இது எதுவும் தெரியாத அந்த அப்பாவி சிறுமி, எப்போதும் போலவே கடந்த 24 ஆம் தேதி புதன் கிழமை அந்த பெண், காலையில் எழுந்ததும் தங்களுக்குச் சொந்தமாக உள்ள வயல் வெளிக்குச் சென்று பயிர்களின் விளைச்சலைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த பகுதியில் குறிப்பிட்ட அந்த சிறுமி வருவதற்கு முன்பே குறிப்பிட்ட அந்த இடத்தில் வந்து காத்திருந்த அந்த 3 பணக்கார இளைஞர்களும்,  அந்த சிறுமி அந்த பகுதி வழியாகக் கடந்து செல்லும் போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த சிறுமியின் வாயை மூடி, தங்களது காரில் கடத்திச் சென்று உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, கடத்திச் செல்லப்பட்ட அந்த சிறுமியை, அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, கிட்டத் தட்ட 15 மணி நேரமாக அடைத்து வைத்து அந்த பணக்கார இளைஞர்கள் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சுமார் 15 மணி நேரம் முடிந்து காம இச்சை எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த 15 வயது சிறுமியை மீண்டும் தங்களது காரில் ஏற்றிக்கொண்டு, அன்று இரவு 10 மணி அளவில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே கொண்டு வந்து விட்டு விட்டு, அந்த பணக்கார இளைஞர்கள் தப்பிச் சென்று உள்ளனர். 

அத்துடன், “இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னைக் கொன்று விடுவோம்” என்றும், அவர்கள் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள். 

இதனையடுத்து, நடக்க முடியாமல் வீடு திரும்பிய அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பணக்கார இளைஞர்களைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர்கள் தற்போது தலைமறைவாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அந்த சிறுமியின் குடும்பம் மிரட்டப்படுவதாகவும், இந்த வழக்கைத் திரும்பப் பெற வைக்க, அந்த குடும்பத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.