ஆசிரியரின் மனைவி அழகாய் இருந்ததால், “உன் மனைவியை பலாத்காரம் செய்வோம்” என்று, சக ஆசிரியர்கள் சிலர் மிரட்டியதால், அப்பாவி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரபிரப் தேசம் மாநிலம் லக்னோவின் பஹ்ரைச்சில் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், அவருக்கு அழகான மனைவியும் இருக்கிறார். 

அதே நேரத்தில், அப்பாவியான அந்த ஆசிரியர் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி மிகவும் சாதுவாக இருந்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், இந்த சாதுவான ஆசிரியரின் மனைவி மிகுந்த அழகாக இருந்ததால், பள்ளியில் இந்த ஆசிரியருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களும், அவர் மீது மிகுந்த பொறாமை கொண்டிருந்தனர். 

அத்துடன், உடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் சிலர், இந்த அப்பாவி ஆசிரியர் வீட்டின் அருகிலேயே குடியிருந்து வந்திருக்கிறார்கள். இதனால், பள்ளியிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் சரி, எப்போதும் அந்த சாதுவான ஆசிரியரை அவரின் மனைவியை வைத்து கிண்டல் பண்ணுவதையே அந்த ஆசிரியர்கள் வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 4 பேர் சேர்ந்து, அந்த அப்பாவின் ஆசிரியரின் மனைவியைத் தினமும் கேலியும் கிண்டலும் செய்து வந்திருக்கிறார்கள்.

இது, ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் உள்ளது. அப்போது, அந்த அப்பாவி ஆசிரியரிடம்.. உடன் பணியாற்றும் அந்த 3 ஆசிரியர்கள் உட்பட 4 பேர் சேர்ந்து, “உன் மனைவியை உன் கண் முன்னாடியே பாலியல் பலாத்காரம் செய்வோம்” என்று, அவரை மிரட்டி உள்ளானர். 

இதனால், அந்த சாதுவான ஆசிரியர், கடும் அதிர்ச்சியடைந்து அவர்களை எதிர்த்துப் பேச முடியாமல் திகைத்துப் போயும், மிரண்டு போயும் நின்று உள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த அப்பாவி ஆசிரியர், இந்த மிரட்டல் விவகாரத்தை தன்னுடைய சக நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் தெரியப்படுத்தி இருக்கிறார். 

அதன் பிறகு, இரவு முழுவதும் தூங்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவித்து வந்த அந்த அப்பாவி ஆசிரியர், மறு நாள் எப்போதும் போல் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். 

அங்கும், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பள்ளி கூடத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து, அந்த ஆசிரியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த ஆசிரியரின் சக நண்பர்கள் போலீசாருக்கு தன்னிடம் வாட்ஸ்ஆப்பில் அந்த அப்பாவி ஆசிரியர் அனுப்பிய “சக ஆசிரியர்களின் பாலியல் மிரட்டல்” குறித்து அதரத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட போலீசார், அந்த அப்பாவி ஆசிரியரை தொடர்ச்சியாக மிரட்டி வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சக ஆசிரியர்கள் 3 பேர் உட்பட 4 பேரை அதிரடியாகாது கைது செய்து, அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.