மாடல் உலகில் பெயர் போனவர் நடிகை சனம் ஷெட்டி. ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறையில் நுழைந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இதுவரை சொல்லும் அளவுக்கு ஹிட்டாகவில்லை. 

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம். இதில் எதற்கெடுத்தாலும் சக ஹவுஸ்மேட்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் ரசிகர்களின் கடுப்புக்கு ஆளானார்கள். 

இருந்த போதும் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வந்தார். இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சனம்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தொடர்ந்து தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். பிகினி, சேலை என மாறி மாறி அவர் பகிரும் போட்டோக்கள் இணையத்தை அதிர வைக்கிறது. 

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெயிட் லிஃப்ட் செய்கிறார் சனம் ஷெட்டி. ஆனால் வெறும் ராட் மட்டும் தான் உள்ளது. எடைகள் இருப்பது போன்று தெரியவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் வெறும் ராடை மட்டும்தான் தூக்குகிறீர்களா...இது நியாயமா ? என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty)