மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்து 10 மறக்கமுடியாத ஆண்டுகளுக்கு பிறகு செர்ஜியோ அகுவெரோ வெளியேற உள்ளார். அணி 10 கோப்பைகளை வென்றபோது அனைத்துப் போட்டிகளிலும் முன்னணி கோல் அடித்தவர் செர்ஜியோ அகுவெரோ என்று மான்செஸ்டர் கிளப் அறிவித்துள்ளது.

அகுவெரோ 2011 இல் அட்லெடிகோ மாட்ரிட்டில் (Atletico Madrid) இருந்து எட்டிஹாட் ஸ்டேடியத்திற்கு (Etihad Stadium) வந்து அதிரடி கோல்களை அடித்து அணிக்கு பெருமை சேர்த்த வீரர். இந்த சீசன் முடிந்ததும் செர்ஜியோ அகுவெரோ ஒப்பந்தத்தில் இல்லை, அர்ஜென்டினா வீரருடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்பதை Manchester City கால்பந்து அணி உறுதிப்படுத்தியுள்ளது. 

அவர் அணியில் நீடிக்க விரும்பினாலும், அவருக்கு ஏற்பட்ட  காயம் மற்றும் உடல்நிலையினால்,  இந்த சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் மட்டுமே அவர் கலந்துக் கொள்ள முடிந்தது. இதுவே அவருடைய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததற்கு காரணமானது.

அகுவெரோ இதுவரை சிட்டிக்காக 384 போட்டிகளில் விளையாடி 257 கோல்களை அடித்திருக்கிறார் - இது மான்செஸ்டர் கிளப்பில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையாகும்.

தனுஷ் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செர்ஜியோ அகுவெரோ இனி மான்செஸ்டர் அணிக்கு விளையாட மாட்டார் என்பது தெரிந்தவுடன், தனுஷ் உருக்கமாக பதிவை செய்துள்ளார். நீங்கள் ஒரு ஹீரோ, லெஜெண்ட், உங்களை மிஸ் செய்வோம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டும் தனுஷை நாம் பார்த்திக்கிறோம். ஓய்வு நாட்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் பழக்கத்தை வைத்துள்ளார். 

தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ரஜீஷா விஜயன், லால், நட்டி நட்ராஜன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்காக மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.