மாறா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் மாதவன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாள, கன்னடம் என 6 மொகிகளில் தயாராகி வருகிறது.

சாம் சி.எஸ் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். மாதவன் இந்த படத்தை இயக்கி நடிப்பதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். தமிழில் வெளியான ட்ரைலர் காட்சியில் சூர்யா வந்தது இன்பதிர்ச்சியாக இருந்தது. படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் ஷாருக்கான் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு சம்மருக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.