நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியனுடன் இன்னொரு சூப்பரான ஹீரோயினும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை சிங்கப்பெண்ணாக இருந்து பலருக்கும் சவால் விட்ட நடிகை ரம்யா பாண்டியன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் எவிக்ட் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வீட்டுக்குப் போன ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் வேற லெவலில் கொண்டாடி வரவேற்றனர். செண்டை மேளங்கள் முழங்க, வீதியில் ஆடிப் பாடி, கேக் வெட்டி ரம்யா கொண்டாடிய வீடியோ பலரையும் கவர்ந்தது. 

பிக் பாஸ் வீட்டில் 105 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு நடிகர் சூர்யாவின் 2Dநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் அட்டகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சந்தோஷத்தை தனது ரசிகர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியனின் புதிய படத்தை அறிமுக இயக்குனரான அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதை பிடித்துப் போகவே ரம்யா பாண்டியன் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளாராம். ஜோக்கர், ஆண் தேவதை என ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டுள்ளது. பட பூஜையில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியனின் அழகான புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதை ஷேர் செய்த 2D தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரம்யா பாண்டியன். 

அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோ யார்? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிக்கும் சூப்பர் அப்டேட், பட பூஜையில் வெளியான புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை வாணி போஜன் தான் ரம்யாவுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.