தொலைக்காட்சியில் VJ வாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்களில் இப்போ அகல்யாவும் சேர்ந்துள்ளார். அவர் ஆதித்யா சேனலில் நீங்க சொல்லுங்க டூட் மற்றும் மாமா நீங்க எங்க இருக்கீங்க மூலம் பிரபலமானவர். 2013ம் ஆண்டு இவர் சீரியல் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இளைஞர்கள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனம் விட்டு சிரிக்க வைத்து எல்லோருக்கும் பிடித்த நம்ம வீட்டு பெண்ணாக மாறியிருக்கிறார். 

சுமதி என்ற தொலைக்காட்சி சீரியலிலும் அலுவலகம் என்ற சீரியலிலும் ஆரம்ப காலகட்டங்களில் நடித்தார். மார்ச் 11 2013 முதல் 2015 வரை ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சி இவரை உலகளவில் பிரபலமாக்கியது. அதன் பிறகு நீங்க சொல்லுங்க டூட் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது இவருக்கு சூப்பர் ஹிட் ஆக மாறியது. அதன் பிறகு ஒருநாள் விஜே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பிறகு அகல்யா தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு ,k13 என சில படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். 

இந்நிலையில் உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் அகல்யா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அகல்யாவை பாராட்டி வருகின்றனர். எந்த ஒரு சர்ஜரி இல்லாமல், டயட் மட்டுமே கொண்டு உடல் எடையை குறைத்ததாக அகல்யா பதிவு செய்து வருகிறார். இப்படி ஓர் ரிசல்டை பார்ப்பதற்கு 90 நாட்கள் காத்திருந்ததாக அகல்யா குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் உடல் எடை குறைத்தது மிகவும்பேசப்பட்டது. கடந்த வாரம் நடிகை நமீதா உடல் எடை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டார். திரைப்பிரபலங்கள் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருப்பது, அவர்களின் ரசிகர்களையும் உத்வேகப்படுத்தி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akalya Venkatesan (@akalyavenkatesan_official)