2021ம் ஆண்டிற்கான நடாளுமன்ற கூட்டுக் கூட்டத் தொடரை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அப்போது புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைப்பெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது குறித்து பேசினார். 


அவர் கூறியது, ‘’ மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். குடியரசு தினம் போன்ற புனிதம் மிகுந்த நாளில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. நமது கருத்துச் சுதந்திரத்தை வழங்கும் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் விதிகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்பதையும் நமக்கு சொல்கிறது. அதை மறந்துவிட கூடாது.


புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளது. அதை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் 7 மாதங்களுக்கு முன்பு  நிறைவேற்றப்பட்ட  இந்த சட்டங்கள் மூலம் 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  


மேலும் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதிக்கான திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவ 1,130,00 கோடி ரூபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள்  தங்களுக்கு உரிய விலையை பொறுவது தான் அரசின் நோக்கம்.” என்றுள்ளார்.