புதுச்சேரி முதலமைச்சர் நாராணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.  


சமீபத்தில் நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து காங்கிரஸ் 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


இந்நிலையில் மால்லாடி கிருஷ்ணாராவைத் தொடர்ந்து, காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எ.ஏ ஜான் குமார் ராஜினாமா செய்துள்ளார். 


எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் இருக்கிற அதிமுக’வில்  4 உறுப்பினர்களும், பாஜக’வில் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இருப்பதால், எதிர்க்கட்சிகள் 14 உறுப்பினர்களுடன் பலமாக இருக்கிறது. இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.