பிறந்த நாள் விழாவில் தன்னுடன் படிக்கும் சக கல்லூரி தோழிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கல்லூரி மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் 18 வயதான ஒரு கல்லூரி மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் தங்கி அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.

அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் முன்னு என்ற இளைஞன், அந்த மாணவிக்குத் தோழனாக அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து, அந்த இளம் பெண்ணும், அந்த இளைஞரும் ஒருவருக்கொருவர் நட்பாகப் பழகி வந்தனர். 

இவர்களது நட்பு நெருக்கமானதால், அவர்கள் இருவரும் சமூக ஊடகத்தில் நாள் தோறும் அரட்டை அடித்துக்கொண்டே பழகி வந்து உள்ளார்கள். 

இந்த நிலையில் தான், அந்த இளைஞன் முன்னுவுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்து உள்ளது. அப்போது, தன்னுடைய பிறந்த நாள் விழாவை, அதே ஊரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார். அதன் படி, தன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு சக நண்பர்களையும் அழைத்த முன்னு, தனது புதிய தோழியான அந்த இளம் பெண்ணையும் அந்த பிறந்த நாள் விழாவிற்கு குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு அழைத்து உள்ளார்.

அதன் படி, நண்பனின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தன்னுடைய வீட்டில் சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று, வீட்டில் சொல்லாமலே ரகசியமாக அந்த இளம் பெண் சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த பிறந்த நாள் பார்ட்டியில் எல்லோரும் கேக் சாப்பிட்டு விட்டு, குளிர் பானம் குடித்து உள்ளார்கள். 

அந்த நேரத்தில், அந்த இளம் பெண்ணுக்குப் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் முன்னு, தான் மயக்க மருந்து கலந்து வைத்திருந்த குளிர் பானத்தை, அந்த பெண் தோழிக்கு கொடுத்து உள்ளார். இதனைக் குடித்ததும், அந்த இளம் பெண் சற்று அங்கேயே மயக்கி உள்ளார். 

அதன் பிறகு, அந்த இளம் பெண்ணை, தனது தோழி என்றும் பார்க்காத அந்த இளைஞன், அரை மயக்கத்தில் இருந்து அந்த இளம் பெண்ணை, அங்கிருந்த ஒரு ரூமிற்க தூக்கிச் சென்று, அங்கு வைத்து அந்த பெண்ணை அரை மயக்கத்தில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பாலியல் வெறி தீர்ந்த பிறகு, அந்த இளைஞன், அந்த இளம் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தனது வீட்டிற்குச் சென்று உள்ளான்.

இதனையடுத்து, காலையில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த அந்த பெண், தனது உடலில் ஆடைகள் எல்லாம் விலகி, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அந்த பெண்ணிற்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக வீட்டிற்குத் திரும்பி, தனது பெற்றோரிடம் இது குறித்து கூறி கதறி அழுது உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் முன்னு மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முன்னுவை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட முன்னுவின் பெற்றோர், இந்த பலாத்கார குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்கள். இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பிறந்த நாள் விழாவில் தன்னுடன் படிக்கும் சக கல்லூரி தோழிக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கல்லூரி மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.