16 வயது சிறுமியை பேசுவதற்காக மாடிக்கு அழைத்து, மடியில் உட்கார வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், கடும் எதிர்ப்புத் தெரிவித்த சிறுமியை, இரு இளைஞர்கள் சேர்ந்து மாடியிலிருந்து கீழே தள்ளிய கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் என்னும் பகுதியில் தான், இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்து உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபிட்டி என்னும் பகுதியில் மகேந்திரா மற்றும் அரவிந்த் ஆகிய இரு இளைஞர்களும் வேலைக்குச் செல்லாமல், அந்த ஊரில் வெட்டியாக ஊர் சுற்றி வந்து உள்ளனர். 

மது போதைக்கு அடியான அந்த இரு இளைஞர்களும், அன்றாடம் ஊரில் உள்ள இளம் பெண்களையும், ரோட்டில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களையும் சுற்றி வந்து தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் வீடுகளை நோட்டமிட்டு, அவர்களது வீட்டிற்கு முன்பு அமர்ந்து, அந்த பெண்களோடு பேச முற்படுவதாகவே இருந்து உள்ளனர். அதுவே, அந்த இரு இளைஞர்களுக்கும் பொழுது போக்காக இருந்து உள்ளது. 

இப்படியான சூழ்நிலையில், அந்த பகுதியில் 16 வயதான தலித் சிறுமி ஒருவர், தன்னுடைய பெற்றோரோடு வசித்து வந்து உள்ளார். 

இதனால், அந்த பெண்ணை பார்க்க அடிக்கடி அந்த அரவிந்த் மற்றும் மகேந்திரா ஆகிய இருவரும், “எப்படியும் அந்த பெண்ணை மடக்கி விட வேண்டும்” என்று, தீர்மானமாகத் திருந்து உள்ளனர்.

ஆனால், இது தெரியாத அந்த அப்பாவி பெண், அந்த இரு இளைஞர்களிடமும் வீட்டிற்குத் தெரியாமல் நட்பாகப் பேசி வந்து உள்ளார். ஆனால், அந்த இரு இளைஞர்களும், இந்த சிறுமியை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பழகி வந்ததாகக் கூறப்படுகிறது,

இப்படியே, அவர்கள் அடிக்கடி அந்த சிறுமியிடம் பேசிவிட்டுச் சென்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு இளைஞர்களும் சேர்ந்து, அந்த பெண்ணை அவர்களின் வீட்டு மாடிக்கு வரச்சொல்லிக் கூட்டிச் சென்று உள்ளார்கள். 

மாடிக்கு அந்த 16 வயது சிறுமி வந்ததும், அங்கு வைத்து அந்த சிறுமியை அவர்கள் இருவரும், தங்களது மடியில் அமரச்சொல்லி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளார்கள். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களிடமிருந்து போராடி உள்ளார்.

அத்துடன், அங்கிருந்து அந்த சிறுமி தப்பியோட முயன்று உள்ளார். அப்போது, அந்த இரு இளைஞர்களும் அந்த சிறுமியை அந்த மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார்கள். இதில், மாடியில் இருந்து கீழா விழுந்த அந்த சிறுமிக்கு, இடுப்பு எலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் காணப்பட்டு உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, தனது மகளை தேடி வந்த அந்த பெண்ணின் தந்தை, சாலையின் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளின் நிலையைக் கண்டு, கண்ணீர் விட்டு அங்கேயே அழுது துடித்தார். 

அதன் பிறகு, அந்த இளம் பெண்ணை அவசர அவசரமாக மீட்டுச் சென்று, அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த சிறுமிக்குத் தொடர்ந்து தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட அரவிந்த் மற்றும் மகேந்திரா ஆகியோர் மீது புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அந்த இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.