ஆபாசப் படம் பார்த்த 10 ஆம் வகுப்பு சிறுவன், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் தான், இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் 10 வது படித்து வந்தான். 15 வயதான அந்த சிறுவனுக்கு, 10 ஆம் வகுப்பு பாடம் திட்டம் தொடர்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் வழியாகப் பாடம் படிக்க, அந்த சிறுவன் பெற்றோர் புதிதாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போனால் தான், இந்த வினையே நடந்திருக்கிறது.

கொரோனா விடுமுறைக் காலத்தில், ஆன்லைன் பாடம் படித்தது போக மீதம் உள்ள நேரங்களில் அந்த மாணவன், அடிக்கடி தனது செல்போனிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்து பழகிக்கொண்டதாகத் தெரிகிறது.

இப்படி, அடிக்கடி செல்பொனில் ஆபாசப் படம் பார்த்து வந்ததால், அந்த சிறுவனுக்கு இந்த வயதிலேயே பாலுணர்வு உந்தப்பட்ட நிலையில், அந்த சிறுவன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், கடந்த வாரம் தன்னுடைய வீடு இருக்கும் அதே பகுதியில் இருக்கும் 8 வயதான சிறுமி ஒருவர் அங்குள்ள ஒரு கடைக்கு, பாணி பூரி வாங்க வந்திருக்கிறார். 

அப்போது, அந்த 15 வயதான சிறுவன், அந்த சிறுமியிடம் சென்று தான் இன்னும் அவருக்கு சாப்பிட நிறையத் தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதாக, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறான். இப்படியாக, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த சிறுமியை அங்கிருந்து ஒரு தனிமையான இடத்திற்கு, அந்த சிறுவன் அழைத்துச் சென்று இருக்கிறான். அதன் பிறகே, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அங்கு அந்த 8 வயது சிறுமியை, அந்த 15 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான் என்று கூறப்படுகிறது. 

இதில், வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது துடிக்கவே, அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்து உள்ளான். இதனையடுத்து, அந்த சிறுமி அழுது கொண்டே தன் வீட்டிற்குச் சென்று உள்ளார். 

அப்போது அந்த சிறுமி அழுவதைப் பார்த்த அவரின் பெற்றோர், “ஏன் அழுகிறாய்?” என்று, சிறுமியிடம் கேட்டு உள்ளார்கள். அப்போது, அந்த சிறுமி “அந்த சிறுவனால், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து சொல்லி” அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவன் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை, தேடி கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். 

இதனையடுத்து, சிறுவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதல் கட்ட விசாரணையில் தான், சிறுவனின் ஆபாசப் படம் விவகாரம் தெரிய வந்தது.

இதனிடையே, ஆபாசப் படம் பார்த்த 10 ஆம் வகுப்பு சிறுவன், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது