“அடிக்கடி மனைவியிடம் அடி வாங்க முடியல.. என்னை காப்பாத்துங்க சார்” என்று, மனைவியின் கொடுமை தாங்க முடியாத கணவர் ஒருவர், போலீசாரிடம் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. 

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த நவரங்க்புரா வட்டாரத்தைச் சேர்ந்த 47 வயதான ஸ்வப்னில் தோஷி என்பவர், தன் 41 வயது மனைவி மினல் தோஷி உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. 

அத்துடன், கணவன் ஸ்வப்னில் தோஷி, கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தனது பெற்றோரின் அனுமதியின்றி மனைவி மினல் தோஷியை காதலித்து திருமணம் செய்த கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் திருமணம் செய்துகொண்டது முதல், மனைவி மினல் தோஷிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்து உள்ளது. இதனால், திருமண வாழ்க்கையில் நிம்மதி இழந்த மினல் தோஷி, குடும்பப் பிரச்சினையில் மிகவும் மன வேதனை அடைந்து காணப்பட்டார். 

இந்த நிலையில் தான், இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆயினும், அந்த குடும்பத்தில் மருமகள் - மாமியார் சண்டை ஓய்ந்த பாடில்லை. 

இப்போது அந்த குழந்தைக்கு 8 வயது ஆகிறது. ஆயினும், அவர்களது குடும்ப சண்டை இன்னும் தீராமல் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

இதனால், கணவன் - மனைவி இருவரம் பேசி தோஷியின் பெற்றோரைத் தனியாக விட்டு விட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடிபெயர்ந்தார்கள். 

அப்படி, புதிய வீட்டிற்குச் சென்ற பிறகும், அவர்களது குடும்ப சண்டை முடியவே இல்லை. மீண்டும் மீண்டும் சண்டை தொடர்ந்துகொண்டே இருந்து உள்ளது. 

இதனால், மாமியார் வீட்டிற்கு வந்த அந்த மருமகள், மாமியாரை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனது தாயாரைத் தாக்கிய மனைவியை கணவன் தட்டிக்கேட்டு உள்ளார். அப்போது, குடும்ப சண்டையைத் தட்டி கேட்ட தனது கணவரையும் அவர் நெஞ்சிலே மிதித்து உதைத்துத் தாக்கி உள்ளார். அதனால், அந்த குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டில் சாப்பிட்டு காலம் தள்ளி வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்ல, கடந்த 4 ஆம் தேதி மீண்டும் அந்த பெண் தன்னுடைய கணவர் செய்த சிறு தவறுக்காக, அவரை கடுமையாக அடித்து உதைத்து உள்ளார். 

இப்படி அடிக்கடி மனைவியிடம் அடி வாங்க முடியாமல் தவித்து வந்த அந்த கணவர், இதற்கு மேலும் இனி அடிவாங்க முடியாது என்று முடிவு எடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, “என்னுடைய மனைவி என்னை அடித்து நாள் தோறும் கொடுமைப்படுத்துகிறாள் என்று, பகிரங்கமாகக் குற்றச்சாட்டிய கணவன், சுமார் 10 பக்கத்துக்கு அவர் செய்த கொடுமைகளை எழுதி புகார் மனுவாக அளித்து உள்ளார்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவனிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அவர் மனைவி  மினலை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் கொடுமை தாங்க முடியாத கணவர் ஒருவர், காவல் நிலையத்தில் 10 பக்கம் அளவிற்குப் புகார் அளித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.