மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாஜகவும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, வியூகங்களை வகுத்து வருகிறது. 


இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கண்டி பகுதியில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ’’ மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த மம்தா மறுத்துவிட்டார். அம்பான் புயலுக்காக மத்திய அரசு வழங்கிய நிவாரணத்தைக் கொள்ளையடித்தது யார்? வந்தேமாதரம் வாயிலாக நாட்டு மக்களை இணைத்த வங்க மண்ணில் மம்தா பானர்ஜி மாநிலத்தில் பிரிவினையை தூண்டுகிறார். 


மம்தாவின் பிரிவினை அரசியலை மேற்கு வங்காளத்தில் உள்ள குழந்தையும் புரிந்துகொண்டுள்ளது. மேற்குவங்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் மம்தாவின் விளையாட்டு முடியப்போகிறது. மேற்கு வங்காளத்தின் வளர்ச்சியில் பாஜக உறுதியாக உள்ளது” என்று பேசினார்.