2 குழந்தைகளின் தாயோடு கள்ளக் காதலில் இருந்த கல்லூரி மாணவன், தன்னுடைய 20 வயதுக்குள் 2 கொலைகள் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள பனையபுரம் காலணியைச் சேர்ந்த லியோ பால், அதே பகுதியைச் சேர்ந்த சுசித்தா மேரி என்ற பெண்ணை காதலித்து உள்ளார். இவர்களது காதல் சில மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

காதல் திருமணத்திற்குப் பிறகு, காதல் தம்பதிகள் இருவரும் சென்னையில் தங்கிப் பணி புரிந்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 2 குழந்தைகள் தற்போது உள்ளன. 

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில், லியோ பாலுக்கு வேலை பறிபோய் உள்ளது. இதனால், அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் பிழைப்புத் தேடி சொந்த ஊருக்கே திரும்பி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு தளர்வு காரணமாக, சென்னை செல்ல விரும்பிய லியோ பால், தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் ஊரிலேயே விட்டு விட்டு, அவர் மட்டும் சென்னைக்குத் திரும்பி உள்ளார்.

சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த லியோ பால், இடைப்பட்ட நேரத்தில் உடலில் பச்சை குத்தும் பணியையும் கற்றுக்கொண்டு, அதையும் செய்து வந்தார்.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற கணவன் லியோ பாலை, அதன் பிறகு காணவில்லை. இது குறித்து, அவரது மனைவி சுசித்தா மேரி, தனது மாமனாரிடம் கூறியிருக்கிறார். 

இதனால், அதிர்ச்சியடைந்த மாமனார், இது தொடர்பாகப் புகார் அளிக்க, அங்குள்ள விக்கிரவாண்டி காவல் நிலையம் வரச்சொல்லி விட்டு, அவரும் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறார்.

ஆனால், மாமனார் சென்னையில் இருந்து புறப்பட்டு குறிப்பிட்ட அந்த காவல் நிலையத்திற்கு வந்த நிலையில், மருமகள் மட்டும் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால், நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு, அவர் வீட்டில் வந்து பார்த்து உள்ளார். 

அப்போது, வீட்டில் இருந்து மருமகளைக் காணவில்லை. இதனால், நீண்ட நேரமாகத் தாயை காணவில்லை என்று, அவரது இரு குழந்தைகளும் தவித்துக்கொண்டு இருந்து உள்ளனர்.

இதன் காரணமாக, இன்னும் அதிர்ச்சியடைந்த மாமனார், “எனது மகன் காணாமல் போன விவகாரத்தில் என் மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக” காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் தோட்டில் உள்ளே சந்தேகத்திற்கு இடமான இடத்தை போலீசார் தோண்டிப்பார்த்து உள்ளனர். 

அங்கு, கணவன் லியோ பால் காயங்களுடன் சடலமாக புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் போலீசார் விசாரித்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவனுடன், சுசித்தா மேரிக்கு கள்ளக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, அந்த கல்லூரி மாணவனுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த அந்த பெண், அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

அப்போது தான், சென்னையில் இருந்து ஊர் திரும்பிய லியோ பால், வீட்டில் இருந்து வந்ததால், கள்ளக் காதலர்கள் சந்திக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இதனால், கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த கணவனைக் கொலை செய்ய, அவரது மனைவியே முடிவு செய்து உள்ளார். அதன்படி, அன்று இரவு மது போதையில் வந்த கணவனை, அவரது மனைவியே கடுமையாகத் தாக்கியும், அழுத்தை அறுத்தும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, வீட்டின் தோட்டிற்குள்ளேயே புதைத்து விட்டதும் தெரிய வந்தது. 

இதனால், தலைமறைவாக இருக்கும் கள்ளக் காதலர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கள்ளக் காதல் ஜோடி, கேராளவில் கல்லூரி மாணவன் ராதாகிருஷ்ணனின் உறவினர் வீட்டில் அவர்கள் இருவரும் சொகுசாக வாழ்ந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை அதிரடியாக கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக கள்ளக் காதலனான கல்லூரி மாணவன் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இது போன்று ஏற்கனவே அவர் ஒரு கொலை செய்தார் என்றும், அதே பாணியில் தற்போது மீண்டும் இந்த கொலையை செய்துள்ளதும்” தெரிய வந்தது.

இதனையடுத்து, “அந்த முதல் கொலை செய்தது யார் என்றும், எந்த பெண்ணுக்காக செய்யப்பட்டது” என்பது குறித்தம் போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.