10 ஆம் வகுப்பு மாணவியை அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவத்தில், சம்மந்தப்பட்ட மாணவி 3 மாத கர்ப்பம் அடைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன், இந்த சிறுமி தனது பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தாள்.

அதாவது, சிறுமியின் தந்தையின் அண்ணன் குடும்பம், சிறுமிக்குப் பெரியப்பா முறையிலான குடும்பம் என்று, அவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில், சிறுமியின் பெரியப்பா மகன் ஒருவரும் வசித்து வந்தார். அந்த இளைஞர், அந்த சிறுமிக்கு அண்ணன் முறை ஆவார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த 10 ஆம் வகுப்பு சிறுமிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பயந்து போன சிறுமியின் பெற்றோர், சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது” கூறியுள்ளனர்.

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அத்துடன், மருத்துவமனையின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசார், கர்ப்பம் குறித்து சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், கூட்டுக் குடும்பம் என்பதால் பெரியப்பா மகனான 17 வயது சிறுவன், சிறுமியை தனது தங்கை என்றும் பார்க்காமல், சிறுமியை கட்டாயப்படுத்திப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

அத்துடன், இந்த பாலியல் பலாத்காரம் பற்றி வெளியே யாரிடமும் எதுவும்  சொல்லக்கூடாது என்று கூறி, அந்த சிறுமிக்கு அவன் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதன் காரணமாகவே, சிறுமி சிறுமி கர்ப்பமாகி இருக்கிறாள் என்ற உண்மையும் அனைவருக்கும் தெரிய வந்தது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிலை குலைந்து போய் உள்ளனர்.

மேலும், சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள சிவமொக்கா அரசு மருத்துவமனையில் போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்து 3 மாதம் கர்ப்பமாக்கிய பெரியப்பா மகனான 17 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.