கணவனின் நண்பனோடு மனைவி கள்ளக் காதலில் இருந்த நிலையில், காதலனே காதலியை அடித்துக்கொன்ற கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 30 வயதான சந்திரா என்ற பெண், தனது கணவர் மணிகண்டன் உடன் வசித்து வருகிறார்.

கணவன் மணிகண்டன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், குடும்பச் சூழல் காரணமாக, மனைவி சந்திரா அங்குள்ள ஒரு துணிக் கடையில் பணியாற்றி வந்தார்.

கணவன் மணிகண்டன் உடன், மனைவி சந்திரா மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், மணிகண்டனின் நட்பின் மூலமாக அவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

அதாவது, சந்திராவின் கணவன் மணிகண்டன், அங்குள்ள நண்மங்கலத்தை சேர்ந்த தினேஷ் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இவர்கள் இருவரும் மிக நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், கணவன் மணிகண்டன் தனது நண்பரான தினேஷை, தொடக்கத்தில் தனது வீட்டிற்கு ஒரு சில முறை அழைத்துச் சென்று உள்ளார். ஆனால், அதன் தொடர்ச்சியாக தினேஷ், மணிகண்டனை பார்க்க அடிக்கடி அவரின் வீட்டிற்கு வரத் தொடங்கி உள்ளார். அப்படியான தருணத்தில், தினேஷிற்கும் நண்பனான மணிகண்டனின் மனைவி சந்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், மறுபக்கம் அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டும் வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி தினேஷ், நண்பனின் மனைவியான சந்திராவை, அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது தினேஷ் அந்த பெண்ணிடம் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு சந்திரா மறுத்து உள்ளார். இதனால், பாலியல் இன்பம் கிடைக்காத அந்த கோபத்தில் இருந்த தினேஷ், விரக்தியில் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து சந்திராவின் தலையில் தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில், அந்த பெண் சந்திரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, போலீசாருக்கு இது தொடர்பாக விசயம் தெரிய வந்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில், கணவனின் நண்பன் தினேஷ்க்கு தொடர்பு இருப்பதும், அவர்களுக்குள் இருந்த பழக்கமும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, நண்பனின் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக, தினேஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.