யூ டியூபில் ஆபாசப் படத்தில் நடிக்க வைக்கப்பட்ட இளம் பெண்கள் பாலரும், அதன் உரிமையாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் 
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் உள்ள தானே என்னும் பகுதியைச் சேர்ந்த 29 வயதான முகேஷ் குப்தா, அவரது கூட்டாளிகளான 25 வயதான ஜிதேந்திர குப்தா, இவருடன் 23 வயதான குமார் சவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து குரார்ஹாட்டில் கிட்டத்தட்ட 17 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களைச் செயல்படுத்தி  வந்தனர்.

இந்த 3 பேரும் சொந்தமாக வைத்து நடத்திய இந்த யூ டியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை தங்கள் வசம் தக்க வைத்து இருக்கிறார்கள். 

குறிப்பாக, தங்களது யூ டியூப் சேனலை சீக்கிரம் பிரபலப்படுத்த வேண்டும் என்றும், சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை படமாக்கி, அவற்றை தங்களது யூ டியூப்பில் வெளியிட்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மட்டும் அந்த 3 பேரும் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு பணம் சம்பாதித்து உள்ளனர். 

முக்கியமாக, இந்த 3 பேரும் சேர்ந்து இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்குக் குறைவான சிறுமிகளை அழைத்து அவர்களிடம் பேரம் பேசி, அவர்களுக்கு உண்டான பணத்தையும் கொடுத்து, இந்த யூ டியூப் சேனலுக்கான வீடியோக்களில் நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

அத்துடன், இப்படியாக பணம் கொடுக்கப்படம் அல்லது விலை பேசப்படும் சில பெண்கள் என்ன செய்வார்கள் என்றால், “பொது இடங்களில் குறும்பு வீடியோக்களைப் படமாக்கவும், சில போலியான காரணத்திற்காகப் பெண்களின் தனிப்பட்ட பகுதிகளைத் தொட்டு, ஆபாசமாகப் பேசியும், அதையும் வீடியோவாக பதிவு” செய்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இப்படி பணத்திற்காக யூ டியூப்பில் ஆபாசமான காட்சிகளுக்கு நடிக்க வந்த 5 பெண்களையும், இந்த யூ டியூப்பின் உரிமையாளர்காளன இந்த இளைஞர்கள் 3 பேருமாக சேர்ந்து, அந்த 5 இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட 5 பெண்களும், இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் தீவிரமான முறையில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “யூ டியூப் சேனலை மிகவும் ஆபாசமான வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் அதிக எண்ணிக்கையில் பகிரப்பட்டு, அனைத்து தரப்பினராலும் பார்க்கப்படுகிறது என்றும், இதன் காரணமாகவே பிராங்க் வீடியோக்கள் என்ற பெயரில் சில போலிக் காரணத்திற்காகப் பல ஆபாச வீடியோக்களை படம் பிடித்து வந்திருக்கிறார்கள்” என்பதும், தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், “இப்படியாக யூ டியூப் சேனலில் நடிக்க வரும் பெண்களை ஏமாற்றி, அவர்களைக் காட்சிப் பொருளாக வைத்து இந்த 3 பேரும் தொடர்ந்து பணம் சம்பாதித்து வந்திருப்பதும்” தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட 3 பேர் மீதும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இன்னும் விசாரணை தொடர்ந்து வருகின்றனர். 

மேலும், கைது செய்யப்பட்ட 3 யூ டியூப் சேனல் உரிமையாளர்களிடம் இருந்தும் 5 லேப்டாப், 4 விலை உயர்ந்த செல்போன்கள், ஒரு கேமரா உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், கிடைக்கும் மேலும் சில வீடியோ காட்சிகளை வைத்து, அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.