தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி என  ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், கேரளாவுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்த அவர், அங்கிருந்த மீனவ நண்பர்களுடன் இணைந்து கடலில் நீச்சல் அடித்தார். கடலில் நீச்சலடித்து முடித்த பிறகு ராகுல் காந்தி படகில் நிற்கும் ஒரு படம்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தில் ராகுல் காந்திக்கு ‘6 பேக்’ இருப்பது போல் உள்ளது. இந்த படத்தை வைத்து, ராகுலிடம்  ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.