பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நண்பனின் தாயை வெறிபிடித்த கொடூர இளைஞன் ஒருவன் அடித்தே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் மகசாமுந்த் மாவட்டத்தில் உள்ள பாஸ்னா காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் 20 வயதான சிந்தாமணி படேல் என்கிற சிந்து வசித்து வந்தார். 

இவர், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். இவருக்கு, அந்த பகுதியில் சில நண்பர்கள் உள்ளனர். இதனால், அவர் அடிக்கடி தனது நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, அடிக்கடி அங்கே தங்கி வந்து உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், 20 வயதான சிந்து நேற்று முன் தினம் புதன் கிழமை இரவு நேரத்தில், தனது கிராமத்தில் இருக்கும் நண்பன் ஒருவனின் வீட்டிற்குச் சென்று உள்ளார். 

அப்போது, சிந்துவுடைய நண்பன் வீட்டில் இல்லை. இந்த தகவலை அந்த நண்பனின் 42 வயதான தாய், சிந்துவிடம் கூறியிருக்கிறார்.

மேலும், வயலிலிருக்கும் அறுவடை இயந்திரத்தைப் பார்க்க அழைத்திருந்ததாக, நண்பனின் தாயாரிடம் சிந்து கூறியிருக்கிறார். அந்த வீட்டிற்கு அருகிலேயே சிந்து குறிப்பிட்ட வயல் இருந்ததால், நண்பனின் தாயாரான அந்த 42 வயதான அந்த பெண், சிந்துவை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது, குறிப்பிட்ட அந்த வயல் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் துளியும் இல்லாத நிலையில், நல்ல இருட்டாக இருந்து உள்ளது. அந்த நேரம் பார்த்து, நண்பனின் 42 வயதான தாயார் மீது சிந்து சபலப்பட்டு, அவலை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 42 வயதான பெண், தனது மகனின் நண்பனிடம் இருந்து போராடி உள்ளார்.

எவ்வளவோ முயன்றும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடியாத விரக்தியில், கடும் கோபம் அடைந்த சிந்து, அருகில் கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் போட்டு உள்ளார். இதனால் கதறித் துடித்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார்.

அப்போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை பார்த்த ஊர் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

அத்துடன், அந்த பெண் சுயநினைவை இழக்கும் முன்பாக, “சிந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். அவனது ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால் அங்கிருந்த கல்லை எடுத்து என் தலையில் அடித்துவிட்டு ஓடிவிட்டான்” என்று, கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, ஊர் மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரை அனுமதித்து உள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக, அங்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த, தலைமறைவாக இருந்த சிந்துவை தேடி கண்டுபிடித்து போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.