மனைவிக்கு ஒரு ரூம்.. மாடலிங் பெண்ணிற்கு மற்றொரு ரூம்.. என்று, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தொழிலதிபர் ஒருவர், பாலியல் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையைச் சேர்ந்த 28 வயதான இளம் தொழிலதிபர் ஒருவர், தனது குடும்பத்துடன் தலைநகர் டெல்லியில் உள்ள சனக்யபுரி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி உள்ளார்.

அதே நேரத்தில், இந்த தொழிலதிபர் மும்பையில் இருக்கும் போதே, டெல்லியைச் சேர்ந்த ஒரு மாடலிங் பெண்ணுடன் சமூக வலைத்தளத்தின் மூலமாக அறிமுகம் ஆகி, அந்த பெண்ணுடன் அன்றாடம் பழகி வந்திருக்கிறார். தற்போது, அந்த மாடலிங்க அழகி இருக்கும் டெல்லிக்கே அவர் வந்திருப்பதால், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தன்னை நேரில் பார்க்க வருமாறு அழைத்து இருக்கிறார்.

ஆனால், தன்னுடன் தன்னுடைய ரூமில் தன்னுடைய மனைவி இருப்பதால், சற்று யோசித்த அந்த தொழிலதிபர், தான் தங்கியிருக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் அருகிலேயே உள்ள மற்றொரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து அங்கே அந்த மாடலிங்க அழகியைத் தங்க வைத்து இருக்கிறார். அதன்படியே, அந்த மாடல் அழகியும் வந்து தங்கியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, தனது மனைவிக்கு உணவு மற்றும் அவருக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக்கொடுத்துவிட்டு, அவரை நன்றாகத் தூங்க வைத்திருக்கிறார். அதன் படியே, அவர் மனைவி நன்றாகத் தூங்கியதும் அருகில் இருக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூமில் தங்கியிருந்த மாடலிங் பெண்ணை பார்க்கச் சென்றிருக்கிறார். 

அங்கு, அந்த மாடல் அழகியுடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக அந்த மாடல் அழகியை அந்த தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த ரூமில் இருந்து தனது மனைவி தங்கியிருக்கும் ரூமிற்கு வந்த அவர், அதன் பிறகு மும்பை திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த மாடல் அழகி, இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அந்த 28 வயதான இளம் தொழிலதிபர் மீது புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில், “என்னை அந்த நபர் மார்க்கெட்டில் வந்து சந்திக்கச் சொன்னதாகவும், அதற்கு நான் மறுத்ததால் குறிப்பிட்ட அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூமில் என்னை தங்க வைத்து என்னை சந்திக்க வந்த போது, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என்றும், புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த அந்த 28 வயது இளம் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட இளம் தொழிலதிபரைக் கைது செய்யத் தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த தனிப்படை போலீசார் தற்போது மும்பை விரைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மனைவிக்கு ஒரு ரூம்.. மாடலிங் பெண்ணிற்கு மற்றொரு ரூம்.. என்று, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தொழிலதிபர் ஒருவர், பாலியல் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.