இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பாதித்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். தற்போது  சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வருகிறார்.  


சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  மும்பை நானாவதி மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினார். இந்நிலையில், மீண்டும் அமிதாப்  பச்சனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளி வந்தன. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உடல்நிலை மோசம்.. அறுவை சிகிச்சை.. எதையும் எழுத முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் குறித்து திரையுலகினரும் மற்றும் அவரது ரசிகர்களும் பெரும் கவலை அடைந்து உள்ளார்கள்.


‘கூலி’  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அமிதாப்பின் உடல்நிலை  மிகவும் பலவீனமடைந்து, அவ்வப்போது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.