ஆபீசுக்கு எப்போதும் ஆட்டோவில் செல்லும் பெண்ணை கடத்தி, சக ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் சுமார் 30 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த பெண்மணி, எப்போதும் தனது அலுவலகத்திற்கு அங்குள்ள குறிப்பிட்ட ஒரே ஆட்டோவில் தான், வேலைக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படியாக, பல மாதங்களாக இந்த அலுவலக ஆட்டோ பயணம் தொடர்ந்து உள்ளது.

இதனை அந்த ஆட்டோ ஸ்ண்டில் உள்ள சக டிரைவர்களும் கவனித்து உள்ளனர். இதனையடுத்து, அந்த ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள சக ஆட்டோ டிரைவர்களும், அவர்களுடைய சக நண்பர்களும் சேர்ந்து, எப்போதும் அந்த இளம் பெண்ணை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் சம்மந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவருடன் பேசி, “அந்த பெண்ணை கடத்தி, எப்படியும் அடைந்து விட வேண்டும்” என்று, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளனர். 

இப்படியான சூழ்நிலையில், அந்த ஆட்டோ டிரைவரின் சூழ்ச்சி புரியாமல் எப்போதும் போல அந்த பெண் நேற்று முன் தினம் இரவு, காசியாபாத்தில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்குச் செல்ல அங்குள்ள குறிப்பிட்ட அந்த ஆட்டோவில்  ஏறி உள்ளார்.

அப்போது, அதே ஆட்டோவில் அந்த இளம் பெண்ணுடன் சில ஆண்களும் ஏறி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், “இவர்கள் ஏன் என்னுடன் வருகிறார்கள்?” என்று விசாரித்து உள்ளார். அதற்கு பதில் அளித்த அந்த ஆட்டோ டிரைவர், “இவர்கள் எல்லாம் வழியில் இறங்கி விடுவார்கள்” என்று, கூறியுள்ளார். 

இதனையடுத்து, அந்த ஆட்டோ ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று உள்ளது. அப்போது, அந்த ஆட்டோ காசியாபாத்தில் உள்ள லால் குவான் அருகே சென்ற போது, அந்த ஆட்டோவில் இருந்த ஆண்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடித்தும்,  துன்புறுத்தியும், மிரட்டியும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை அங்குள்ள ஹப்பூர் மாவட்டத்தின் பில்குவா பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஓரத்தில் தூக்கி வீசி விட்டு சென்று இருக்கிறார்கள். இதனால், வலி தாங்க முடியாமல் நடக்க முடியாமல் அங்கிருந்து எப்படியோ போராடி எழுந்து நடந்த அந்த பெண், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கூறி உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் நிலைமையைப் பார்த்த அந்த போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட  குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உள்ளார்கள். அத்துடன், அவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.