மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் பாரம்பரிய முறைப்படி மதுபானத்தால் குளிப்பாட்டப்பட்டு மன்னராக மகுடம் சூட்டப்படுவார்.

peel island

இங்கிலாந்தின் கும்பிரியா கடற்கரையில் உள்ளது பீல் தீவு. அந்த நாட்டின் மிகவும் பிரமலமான தீவான இது  மக்கள் அதிகம் விரும்பும் சுற்றலா தலமாக இருந்து வருகிறது. இந்த தீவு பல ஆண்டு காலமாக மன்னர் ஆட்சியின் கீழ் உள்ளது. அதாவது இந்த தீவை நிர்வகிக்க விரும்பும் நபர் தாங்களாக முன்வந்து மன்னராக தங்களை முன்மொழியலாம். அதிக தொகைக்கு இந்த தீவை ஏலம் கேட்பவர்கள் குத்தகையின் அடிப்படையில் இந்த தீவின் மன்னராக அறிவிக்கப்படுவார்.

தற்பொழுது மன்னராக ஒருவர் இருக்கும் காலகட்டத்தில் அந்த தீவின் மூலம் வரும் வருவாய் அனைத்தும் அவருக்கே சேரும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்புவரை இந்த தீவை ஒரு மன்னர் ஆண்டு வந்தார். பெருந்தொற்றின் வீரியம் காரணமாக பீல் தீவை ஆட்சி செய்த வந்த மன்னர் பதவி விலகினார்.

மேலும் அதன் பிறகு  இந்த ஆண்டு ஜூலையில் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் மீண்டும் இந்த தீவு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த தீவை  நிர்வகிப்பதற்கு மன்னரை தேடும் படலம் மீண்டும் தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் நபர் பாரம்பரிய முறைப்படி மதுபானத்தால் குளிப்பாட்டப்பட்டு மன்னராக மகுடம் சூட்டப்படுவார்.

இந்நிலையில் மன்னராக முடிசூட்டப்படுபவர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தீவை  பராமரிக்க வேண்டும். தீவில் உள்ள கட்டிடங்களை முறையாக நிர்வகிப்பதும் மன்னரின் பொறுப்பாகும். 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தீவு, மோர்கேம்பே விரிகுடாவில் உள்ள பாரோ-இன்-பர்னஸ் கடற்கரையிலிருந்து 2,620 அடி அதாவது 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில் 14 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பீல் கோட்டை ஒன்று உள்ளது. இங்கு படகு சேவை மிகவும் பிரபலம்.