தெலுங்கு சினிமா ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும்  முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கியுள்ள புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் கடந்த  டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் புஷ்பா திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 
மேலும் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது.

மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ள புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புஷ்பா திரைப்படம்வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா திரைப்படத்தில்  இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா எனும் பாடல் நடிகை சமந்தாவின் அசத்தலான நடனத்தால் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான ஜூலி இந்த பாடலை Recreate செய்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த ரீல்ஸ் இதோ…