வானில் அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரை கீழே இறக்க முடியாமல் நண்பர்கள் திணறினர்.

pattam

இலங்கை நாட்டில்  ராட்ச பட்டங்களை ஒன்றாக கட்டி பறக்க விட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ராட்சத  பட்டங்களை தயாரித்து உள்ளனர். இந்நிலையில் அதிக காற்றும் வீசும் பகுதிக்கு வந்த அவர்கள் அந்த பட்டத்தை பறக்க விட்டுள்ளனர். அந்த சமயத்தில் முன் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுவதற்குள் பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விட்டு விட்டனர். அடுத்த கணமே காற்றின் வேகத்தோடு முன் பக்கத்தில் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞரும் பட்டத்துடன் தூக்கிச் செல்லப்பட்டார்.

மேலும் வானில் அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரை கீழே இறக்க முடியாமல் நண்பர்கள் திணறினர். இந்த நிலையில் காற்றின் வேகம் சற்று தணிந்து பட்டம் கீழே இறங்கியதும் கயிற்றின் பிடியை அவர் விட்டுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.