தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா, தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளிலும் வரிசையாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த புஷ்பா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலிவுட்டிலும் களமிறங்கும் ராஷ்மிகா மந்தனா மிஷன் மஞ்சு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து GOODBYE படத்திலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருங்கால கதாநாயகிகளாக ஆசைப்படும் நடிகைகளுக்கு முக்கிய அட்வைஸை நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்டேட்டஸில், “திரையுலகில் நடிகையாக இருப்பதால் கிடைக்கும் நல்ல விஷயங்களுக்காக யாராவது நடிகையாக வேண்டும் என்று விரும்பினால் அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்! எடுத்துக்காட்டுக்கு பலமுறை நீங்கள் லேசர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஆனால் இது மிகுந்த வலியை தரக்கூடியது! நான் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா வின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
rashmika mandanna important advice to aspiring actor and actress