இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவந்து , குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாட சூப்பர் ஹிட்டானது அண்ணாத்த திரைப்படம்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சூரி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.  டி.இமான் இசையில் அண்ணாத்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுயிரே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது. தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராம் பாடும் என்னுயிரே பாடல் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ இதோ...