தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து மகிழ்வது வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து கொண்டாடும் வகையிலான மாஸ் என்டர்டைனிங் திரைப்படமாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட்டானது.

திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்க மிரட்டலான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்திருந்தார். மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஏற்பட்ட பல தடைகளையும் தாண்டி வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

ரசிகர்களின் பேராதரவோடு தொடர்ந்து 25 நாட்களை கடந்தும் இன்றும் வெற்றிகரமாக மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக மாநாடு வெற்றி விழா இன்று நடைபெற்றுள்ளது. கோலாகலமான மாநாடு வெற்றி விழா இதோ…