குழந்தைகள் விரும்பி சாப்பிடும் kinder joy, குழந்தைகள் குடலிற்கு தீங்குவிளைவிக்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து குழந்தைகளும்  அதிகமாக விரும்பி சாப்பிடும் சாக்லெட்டுகளில் ஒன்று கிண்டர் ஜாய்.  உலகம் முழுவதுமே இந்த கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கு குழந்தைகளிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.   அதே நேரம் இந்த சாக்லேட்டினால் குழந்தைகளுக்கு பேராபத்து இருக்கிறது என்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கிண்டர் ஜாய் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற்காய்ச்சல் நோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த கிண்டர் ஜாய் சாக்லேட் குறித்த சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் குழந்தைகள் குடற்காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது . 

மேலும் இந்த  கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் செயல்பட்டுவரும் பெரேரோ குழுமம் சாக்லேட் தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டை வெளிநாட்டு சந்தைகளில் இருந்து திரும்பப் பெற்றிருக்கிறது. ஆனாலும் விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று பெரேரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

மேலும் வெளிநாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த கிண்டர் ஜாய் சாக்லேட்டுகள் திரும்பப்பெற கூடுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகள் புனேவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கும்  கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் புனேவில் தயாராகும் சாக்லேட் கிண்ட ஜாய். பெல்ஜியத்தில் தயாராகும் சாக்லேட் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ்.   அதனால் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் போலவே கிண்டர் ஜாய் சாக்லேட் திரும்பப்பெற வாய்ப்பில்லை  என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், கிண்டர் ஜாய் சர்ப்ரைஸுக்கு வந்த நிலைமை கிண்டர் ஜாய்க்கும் வருமா? என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.