இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் அன்றாடம்  அத்தியாவசிய பொருள் தேவைக்கே காத்துக்கிடக்கின்றனர். இதனால் இந்தியா இலங்கைக்கு உதவும் வகையில் அந்நாட்டிற்கு 40,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்கின்றனர்.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
 
இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கூறியதாவது: இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாகக்கூறி அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில்  உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக ரோஷன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக  பல்வேறு பகுதிகளில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்  அமைச்சர் ரணசிங்கே பதவி விலகியது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. 

இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் உடனடியாக பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து விட்டன. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன. இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது.

இதனால்  மேலும் அதிகரிக்கும் வகையில் ஆளும் கூட்டணிக்குள்ளேயே வெளிப்படையாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நேற்று விலகினர். மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிடியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இந்த எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்படுவது என முடிவு செய்துள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அறிவித்து உள்ளனர்.

மேலும் இதன் மூலம் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. ஆட்சியை தக்க வைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் விலகியதால் இலங்கை அரசு கவிழும் நிலையில் உள்ளது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக போவதில்லை என கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். அதேநேரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றவரிடம் அரசை ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்தார்.

அதனைத்தெடர்ந்து அங்கு கோத்தபய மற்றும் மகிந்த இருவரும் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. கண்டன பேரணிகள், மறியல், ஆர்ப்பாட்டம் என பல பகுதிகளில் போராட்டம் நீடித்து வருகிறது. ஆனால் அவர் பதவி விலக போவதில்லை என்று இலங்கை அதிபர் தெரிவித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்களில் அனைத்து விதமான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உயர்மட்ட மருத்துவ அமைப்பான அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கை நாட்டின் மருத்துவ அமைப்பு முற்றிலுமாகசீரழிந்து போனதை தடுக்க அரசும், சுகாதார அமைச்சகமும் தவறிவிட்டதாகவும், இதன் மூலம் மக்களின் வாழும் உரிமையை கூட உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகவும் அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இத்தகைய சூழலில், இலங்கைக்கு உதவி செய்ய இந்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி இந்திய வியாபாரிகள் அந்நாட்டிற்கு 40,000 டன் அரிசியை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள இலங்கையில், அந்நிய செலவாணி கையிருப்பு 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்ததால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இலங்கையில் தற்போது பண்டிகைக் காலம் நெருங்கியுள்ள நிலையில் அதற்கான தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து, சர்வதேச நிதி அமைப்பின் உதவியை இலங்கை நாடியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசு திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அரிசி ஏற்றுமதியில் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ள கொழும்பு நகரில், அரிசி விலையை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து இந்தியா கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசின் வர்த்தக கழகத்திற்கு அரிசி அனுப்பி வைக்கும், பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.வி.கிருஷ்ண ராவ் இது குறித்துப் பேசுகையில், “நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வெகு எளிதாக மாற்றம் செய்யக் கூடிய கண்டெய்னர்களில் முதலில் அரிசியை நிரப்பி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில், இலங்கைக்கு வெகு விரைவாக அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்றும், பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் வாரக் கணக்கில் ஆகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.