ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது.

கன்னட திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில்,  பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தையும் HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியாகவுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 பட்த்தின் மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். 

மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…