9 மனைவிகளுடன் “ஜாலியா ஜிம்கானா” என்று சொகுசாக ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனுக்கு, புதிய சிக்கலாக அதில் ஒரு மனைவி விவகாரத்து கேட்டுள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழ்நாட்டில், 90's கிட்ஸ் பசங்களுக்கு கல்யாணத்திற்கு ஊர்ல ஒரு பொண்ணு கூட கிடைக்காம அவன் அவன் திண்டாடிக்கிட்டு இருக்கான். இங்க என்னடானா, ஒருத்தன் 9 மனைவிகளோட “ஜாலியா ஜிம்கானா” வாக, வாழ்ந்து வந்திருக்கிறார். சரி நல்லா இருந்துட்டு போயா..!” என்று, வடிவேலு பாணியில் வாழ்த்தாலாம் என்று பார்த்தால், வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு, அந்த மச்சாக்கார புருஷனுக்க ஒரு புதிய சிக்கல் தற்போது உருவாகி இருக்கிறது.

அதாவது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆண் மாடலான ஆர்தர் உர்ஸோ என்பவர் தான், 9 பெண்களை திருமணம் செய்து, அவர்களுடன் ஜாலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்.

இப்படி, ஒரு ப்ளே பாய், 9 மனைவிகளுடன் வாழ்வதைப் பார்த்து, யார் கண் பட்டதோ தெரிய வில்லை, அதில் ஒரு மனைவியை மட்டும் அவர் சமாளிக்க முடியாமல் திணறி போய் உள்ளார்.

அதாவது, ஆர்தர் உர்ஸோவின் 9 மனைவிகளில் ஒருவரான அகதா என்ற பெண் தான், தற்போது தனது கணவனிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக, தனது கணவன் ஆர்தர் உர்ஸோவிடம் இருந்து விவகாரத்து கேட்டிருக்கும் அவரது மனைவியான அகதாவின் பார்வையில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில், “அவர், ஒருதார மண வாழ்க்கையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து உள்ளதாக” கூறப்படுகிறது.

அத்துடன், “பலதார வாழ்க்கை என்பது இனியும் கவர்ச்சி மிகுந்ததாக இல்லை என்று முடிவுக்கு, அந்த மனைவி மட்டும் தற்போது வந்திருப்பதாகவும்” அந்நாட்டின் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், அந்நாட்டின் ஊடகத்தில் பேசிய அந்த அதிஸ்டக்கார கணவன் ஆர்தர் உர்ஸோ, “என் மனைவி விவகாரத்து கேட்கும் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது” என்று, கூறியுள்ளார்.

மேலும், “அகதாவுக்கு நான் மட்டுமே எல்லாம் என்றிருக்க வேண்டும் என்று, அவர் நினைக்கிறார். பலதார திருமண வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியை அவர் இதன் மூலமாக இழக்கிறார்” என்றும, வருத்தமாக குறிப்பிட்டு உள்ளார்.

எனினும், “ஆர்தர் உர்ஸோவிடம் இருந்து அகதா என்ற மனைவி மட்டுமே விவாகரத்து கோரியுள்ள நிலையில், அவரது மற்ற 8 மனைவிகள் ஒற்றுமையாகவே வாழ விரும்புவதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே போல், “முதன் முதலில் மாடலான ஆர்தர் உர்ஸோ, லூயானா கஸாகி என்ற பெண்ணை மட்டுமே திருமணம் செய்திருந்தார் என்றும், முதல் மனைவியான லூயானா கஸாகியும் ஆர்தர் உர்ஸோவின் எண்ணத்தின் படியே வாழ்க்கை முறை கொண்டவர்” என்றும், சொல்லப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டில் தான், அடுத்தடுத்து 8 பெண்களை ஆர்தர் உர்ஸோ, திருமணம் செய்திருக்கிறார்.

ஆர்தர் உர்ஸோக்கு மொத்தமாக 9 மனைவிகள் என்றாலுமே, குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் முதல் மனைவியான லூயானா கஸாகிக்கு மட்டுமே ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மற்ற மனைவி அனைவரிக்கும் தலா ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்பது ஆர்தர் உர்ஸோவின் விருப்பமாக உள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.