பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காதல் ஜோடியின் திருமணம் வருகிற ஏப்ரல் 14-15 தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக ரன்பீர்-ஆலியா இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ரிலீசாகவுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரம்மாஸ்த்ரா படத்தில் நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா, மௌனி ராய், சௌரவ் குஜ்ஜார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ஷாரூக்கான் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். பங்கஜ் குமார் ஒளிப்பதிவில் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

பிரம்மாஸ்த்ரா படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரன்வீர் மற்றும் ஆலியாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் வகையில் படக்குழுவினர் பிரம்மாஸ்த்ரா படத்தின் கேஸரியா பாடல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…