நாசாவின் பார்க்கர் சோலார் விண்கலம் முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து  வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தற்போது பிரபஞ்சத்தின் பல கிரகங்கள் மற்றும் நிலவுகள் தொடர்பான பல அரிய உண்மைகளை விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்டறிந்து அசத்தி வந்தாலும், நமது சூரிய மண்டலத்தின் ஆதார மையமான சூரியன் குறித்த பல தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றன. 

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970-களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’,  சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை. சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது பூமி.

இந்நிலையில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ (The Parker Solar Probe) செயற்கைகோளை நாசா அனுப்பி வைத்தது.

nasa the parker solar probe

இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் வெற்றிகரமாக சூரியனின் வளி மண்டலத்திற்குள்  நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது. சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்துள்ளது. 

மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர் சோலார் ப்ரோப். இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனை குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது.

சூரியனின் தன்மை எப்படி இருக்கிறது, அதன் வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இது விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில்தான் சூரியனின் வெளிப்புற வளிமண்டல பகுதியை நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் தொட்டுள்ளது. அதாவது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல் தொலைவிற்கு அருகில் பார்க்கர் சோலார் ப்ரோப் சென்றுள்ளது.

சூரியன் தொடக்கத்தில் உருவான இடமாக கருதப்படும் பகுதிக்குள் இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் சென்றுள்ளது. இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் 4.5 இன்ச் தடிமானம் கொண்ட கார்பன் காம்போசைட் ஷீல்ட் ஒன்று உள்ளது. இதுதான் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுத்து பார்க்கர் சோலார் ப்ரோப்-ஐ காப்பாற்றுகிறது. 

சூரியனின் வெப்பத்தில் ஐஸ் கிரீம் போல பார்க்கர்  சோலார் ப்ரோப் உருகாமல் தடுப்பது இந்த ஷீல்ட்தான். இந்த ஷீல்டின் வெளிப்புறம் மட்டும் 1377 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல கூடியது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை கொரோனா என்று அழைப்பார்கள். 

அதாவது நமது வளிமண்டலம் எப்படி உயரத்தின் அடிப்படையில் ஸ்ட்ரேடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் கொரோனா என்று அழைக்கப்படுகிறது. (கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள்).

nasa the parker solar probe

இந்த கொரோனாவிற்குள்தான் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் புகுந்துள்ளது. இது இப்போது நடக்கவில்லை. மாறாக கடந்த ஏப்ரல் மாதம் பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனின் இந்த பகுதிக்குள் நுழைந்துள்ளது. 

ஆனால் டேட்டா அடிப்படையில் இப்போதுதான் இதை நாசா உறுதிப்படுத்தியது. இந்த கொரோனா பகுதி சூரியனின் அருகாமை வளிமண்டலத்தை விட அதிக வெப்பநிலையுடன் இருக்கும். இங்கே இருக்கும் புழுதி, வேகம் காரணமாக சூரியனின் அருகாமை பகுதியை விட இந்த பகுதி அதிக வெப்பநிலையாக இருக்கும். 

இதனால்தான் இப்போது கொரோனா பரப்பை பார்க்கர் சோலார் ப்ரோப் தொட்டதை சூரியனை தொட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சூரியன் குறித்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த டேட்டாக்களை நாசா ஆராய்ந்து வருகிறது.

நாசா எதிர்பார்த்ததை விட சூரியனின் இந்த கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதியாகவும் இருந்துள்ளது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது. இது தற்போது 500000 கி.மீ./ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் மூன்று முறை சூரியனின் கொரோனா பகுதிக்குள் பார்க்கர் சோலார் ப்ரோப் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

மொத்தமாக 5 மணி நேரத்தில் இப்படி சூரியனின் வளிமண்டல பகுதிக்குள்ளே 3 முறை பார்க்கர் சோலார் ப்ரோப் போய்விட்டு திரும்பி வந்துள்ளது. ஆனால் அந்த சுற்று வட்டாரத்தில் பார்க்கர் சோலார் ப்ரோப் மிக குறைவான நேரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதில் கடுமையான புழுதி படிந்து இருந்தாலும், அதில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

இதன் மூலம் சூரியன் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். 2025-ல் மீண்டும் பார்க்கர் சோலார் சூரியனுக்கு இன்னும் அருகில் செல்லும். மீண்டும் கொரோனாவிற்கு உள்ளே இன்னும் நெருக்கமாகி பார்க்கர் சோலார் ப்ரோப் செல்லும். இது மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என்று நாசா கூறியுள்ளது.

☀️ Our #ParkerSolarProbe has touched the Sun!

For the first time in history, a spacecraft has flown through the Sun's atmosphere, the corona. Here's what it means: https://t.co/JOPdn7GTcv

#AGU21 pic.twitter.com/qOdEdIRyaS

— NASA (@NASA) December 14, 2021

🔥 Hot off the press! 🔥
We’ve touched the Sun! 👉☀️ Parker Solar Probe has now flown through the Sun’s upper atmosphere, the corona. Flying so close is revealing new things about our star, like where features called switchbacks are born. Learn more: https://t.co/Eaq0CJXvu1 pic.twitter.com/TTB3TPbPFe

— NASA Sun & Space (@NASASun) December 14, 2021