தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் திகழ்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.  முன்னதாக முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாக உள்ளது.

இதனையடுத்து தொடர்ச்சியாக ஒரே சமயத்தில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார் மெகா ஸ்டார். முதலாவதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக தயாராகிவரும் காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை முன்னணி தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

அடுத்ததாக தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக சிரஞ்சீவி நடிப்பில் தயாராகிறது போலா ஷங்கர். தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான #Chiru154 படத்திலும் நடித்து வரும் சிரஞ்சீவி, அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.

சலோ & பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தை RRR படத்தின் தயாரிப்பாளரான DVV தனய்யா தயாரிக்கிறார். மேலும் இது குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.