மிடில்கிளாசில் பிறந்து மீடியாவிற்குள் பல போராட்டங்களை கடந்து என்ட்ரி கொடுத்தவர் மோஹனா VJ.மீடியாவிற்குள் செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவில் போட்டோஷூட்களை நடத்தி மாடல் ஆக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தார் மோஹனா VJ.

அடுத்ததாக வேந்தர் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சினிமா சம்மந்தமான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தினார் மோஹனா VJ.அடுத்தாக புதிய தலைமுறையில் பகுதி நேர தொகுப்பாளினியாக வேலை செய்தார்.

இவற்றை தவிர சில சீரியல்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் யூடியூப் சேனல்களிலும் பகுதிநேர தொகுப்பாளினியாக வேலை பார்த்து அசத்தி வருகிறார்.இவர் கிச்சடி என்ற சேனலில் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் செம ஹிட் அடிக்க இவர் கிச்சடி மோஹனா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

இவர் தனது காதலர் பிரசாந்த் என்பவரை சில மாதங்களுக்கு முன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கரம்பிடித்தார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது கணவருடன் ரொமான்டிக் முத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.