தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சிவா சிவா திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவசிவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் ஜெய்.

தொடர்ந்து இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள பிரேக்கிங் நியூஸ் மற்றும் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் ஜெய் மற்றும் சுந்தர்.C இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே ஜெய் நடித்த எண்ணித்துணிக திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

Rain Of Arrows என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள எண்ணித்துணிக திரைப்படத்தை இயக்குனர் S.K.வெற்றிச்செல்வன் எழுதி இயக்கியுள்ளார். ஜெய்யுடன் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

J.B.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள எண்ணித்துணிக திரைப்படத்திலிருந்து ஏனடி பெண்ணே என்னும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. ஜெய்-அதுல்யாவின் ரொமான்டிக்கான ஏனடி பெண்ணே பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.