இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

earthquake

இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரனமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடலில் பெரும் அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. 

இதனைத்தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஃப்ளோர்ஸ் தீவுப்பகுதியில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.