விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமித் இதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் அமித் ஹீரோவாக நடித்திருந்தார்.இதனை தவிர விஜய் டிவியின் மாப்பிள்ளை,சன் டிவியின் கண்மணி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார் அமித்.

தமிழ்,கன்னடம்,ஹிந்தி என்று பல மொழியின் முக்கிய படங்களான என்னை அறிந்தால்,2 ஸ்டேட்ஸ்,குற்றம் 23,மிருதன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் அமித்.மேலும் டப்பிங் கலைஞராகவும் சில படங்களிலும்,நிகழ்ச்சிகளும் இருந்துள்ளார்.

மேலும் சில தொடர்களை தொகுத்து வழங்கியும் அசத்தியுள்ளார் அமித்.ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் அமித்.கீர்த்தனா இந்த தொடரின் நாயகியாக நடிக்கிறார்.அம்பிகா,பவ்யாஸ்ரீ,சிவன்யா,மஹாலக்ஷ்மி,யமுனா சின்னதுரை உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர் ஏற்கனவே ஒரு முறை இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது