சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதன் பின்னர் பல உலக நாடுகளுக்கு தொற்று பரவல் ஏற்பட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 

omicron

அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.  இந்த நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாற்றம் பெற்றது கொரோனா.  சமீபத்தில் ஒமிக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரசானது பரவி வருகிறது.

கடந்த நவம்பர் 27-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த பாதிப்பு பின்பு பல உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் உகான் மாகாணத்தில்தான் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சீன அரசு மேற்கொண்ட தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசின் பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து  சீனாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் இருந்து வடக்கு சீனாவின் டியான்ஜின் பகுதிக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என செய்தி வெளியாகியுள்ளது .