அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. 

கொரோனா வைரஸ் தொற்றாலும், பொதுமுடக்கத்தாலும் உலக நாடுகள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. கொரோனா பரவலால் பல லட்சம் மக்கள் தங்கள் உயிர்களை தற்போதும் இழந்தும் வருகின்றனர். 

ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என கொரோனா உருமாற்றத்தால் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என  உருவாகி மக்களை இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் கொரோனா வைரஸ் இன்னல்களை உருவாக்கி வருகிறது. 

america covid cases

கொரோனா தடுப்பூசிகளால் சற்று தணிந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது பல பிறழ்வுகளை கொண்ட ஒமிக்ரான் கொரோனா திரிபு கொணடதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த  ஒமிக்ரான் திரிபு டெல்டாவை விட அதிவேகத்தில் பரவும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஒமிக்ரான் பரவியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு, சராசரியாக 1 லட்சம் குழந்தைகளில் 9 ஆயிரத்து 562 பேர் கொரோனோ பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்கிற அளவில் உள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்து 96 ஆயிரத்து 901 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பில் 17.2 சதவீதத்தினர் குழந்தைகளே என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

கடந்த 1 வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய வார கொரோனா பாதிப்பை விட 24 சதவீதம் அதிகம் ஆகும். 

இதன்மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து 18-வது வாரமாக 1 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளின் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் 21 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 0.27 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகள் என்பது சற்று ஆறுதலான விஷயமாக கருதப்படுகிறது.

மேலும் அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் 4 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகள் என்றும், இதன்மூலம் கொரோனா தொற்றால் குழந்தைகள் மிகத்தீவிரமான உடல் உபாதைகளுக்கு ஆளாகவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

america covid case

எனினும் கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்பு குறித்தும், குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தரவுகள் கொண்டு கண்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி (ஏ.ஏ.பி.) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவில் திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனாவால் சுமார் 50 மில்லியன் (ஐந்து கோடி பேர்) பாதிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளன. 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் வயதானவர்கள் தான் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவால் அதிகம் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 11 வார காலத்தில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 11 வார காலத்தில் கடந்த காலத்தை விட வேகமாக உயிரிழப்பு நடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இது உலக அளவில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.