வெளிநாட்டில் மனைவியின் 2 வது கணவன், தனது வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மலேசியா நாட்டில் தான், இப்படி ஒரு மிக கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்த நிலையில், மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். 

இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இந்த தம்பதியினர் கடந்த 2015 ஆண்டு முறைப்படி விவகாரத்து பெற்றுப் பிரிந்தனர்.

அத்துடன், தனது கணவனிடமிருந்து விவகாரத்துப்  பெற்ற அந்த பெண், தனது பெண் குழந்தை உடன் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 2016 ஆண்டு வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்த திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் தன்னுடைய மகளுடன் சேர்ந்து, தனது புதிய கணவருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அந்த கொடுமையான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

அதாவது, 2 வது திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் தினமும் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அந்த கணவன் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த மனைவியின் முதல் கணவனுக்குப் பிறந்த அந்த 12 வயது பெண் குழந்தையிடம் தந்தையை நடந்துகொள்ள வேண்டிய நபர், சபலப்பட்டு, தனது காமத்தைக் காட்டியிருக்கிறார்.

ஆம், தனது வளர்ப்பு மகளிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வரை சுமார் 105 முறை, அந்த சிறுமியை, தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய அந்த வெறிபிடித்த மிருகம் தினம் தினம் பாலியல் வேட்டையாடி, அந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து, கசக்கிப் பிழிந்திருக்கிறது.

மேலும், “இந்த பாலியல் பலாத்கார சித்ரவதை குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றும், அவர் தொடர்ச்சியாக மிரட்டி வந்திருக்கிறார்.

இப்படியாக, தொடர்ச்சியாகத் தனது மகளை அந்த தந்தை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், திடீரென்று அந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அந்த சிறுமியின் அத்தை, அந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்போது, அத்தை வீட்டிற்குச் சென்ற பிறகு, அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, தனது அத்தையிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அத்தை, சிறுமியின் தாயாரிடம் இது குறித்து கூறிவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அந்த தந்தை மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிக பட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று, அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

அதன் படி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்த காம கொடூரனுக்கு ஆயிரத்து 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனால், இந்த வழக்கும், இந்த வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.