கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள்,  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை வாங்கிக்கொண்டு பதுக்கி வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா.


நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, தனது தேவைக்கு அதிகமாக 12 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏன் வாங்க வேண்டும்? கூடுதலாக வாங்கி பதுக்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏழை நாடுகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு வளர்ந்த  நாடுகள் செய்யும் போது, நாங்கள் எங்கு செல்வது? ஏழை நாட்டில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? உலகில் ஏழை நாட்டு மக்களுக்கு பாதுக்காப்பு இல்லை. 


பணக்கார நாடுகளின் இத்தகைய செயலால் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி அணுக்க பணிக்குழுவை நியமித்துள்ளோம். இருப்பினும் கூடுதலாக பதுக்கி வைத்திருக்கும் தடுப்பூசிகளை அந்நாடுகள் வெளியிட வேண்டும். கொரோனா போன்ற மனித குலத்தை அழிக்கும் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டெழுவது அனைத்து நாடுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் என்று முன்னுரிமை என்ற பாகுப்பாடெல்லாம் பார்ப்பது நல்லது இல்லை.” என்றுள்ளார்.