2 வது இடத்தில் விஜயின் வாரிசு படம்.. Record Break! – அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் 2 வது இடத்தை பிடித்தது - varisu second highest grossing movie in uk | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பர்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் விஜய் நடித்த வாரிசு திரைப்படம். வமாசி இயக்கத்தில் குடும்ப உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வாரிசு திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை பல இடங்களில் அவுஸ் புல்லாகவே உள்ளது. ரசிகர்களின் பேராதரவோடு உலகில்  பல திரையரங்குகளில் ஓடிக்  கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் வெளியான 11 நாளில் உலகளவில் ரூ 250 கோடி வசூல் படைத்து இந்த ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய திரைப்படம் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.

விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகளான இந்தி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது,மேலும் இந்தியாவை தாண்டி விஜய் க்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பதால் வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜயின் வாரிசு திரைப்படத்தை ஐக்கிய ராஜ்ய பகுதிகளில் விநியோகிஸ்த அஹிம்சா என்டர்டெயின்மன்ட் 12 நாளில் வாரிசு திரைப்படம் ஐக்கிய ராஜ்ய பகுதிகளில் செய்த வசூலை அறிவித்துள்ளது அதில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் £835,000 பவுண்டுகளை பெற்றுள்ளது மேலும் அதிக வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படங்களில்  இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளது. இதில் ஐயர்லாந்து பகுதியில் £22,000 பவுண்டுகளும் மற்ற ஐக்கிய ராஜ்ய பகுதிகளில் £813 பவுண்டுகளையும் வசூலித்துள்ளது. முதல் இடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன்  திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அஹிம்சா என்டர்டெயின்மன்ட் பதிவை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

PODRA BGM AH 🔥🚨 #Varisu is now the second highest grossing Tamil film in the UK, with over £835k at the box office. Over 40% increase from #ThalapathyVijay's previous best 📈💪

UK release by your favourite overseas distributor 😘👉 #AhimsaEntertainment pic.twitter.com/uds8EP7FCP

— Ahimsa Entertainment (@ahimsafilms) January 24, 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு திரைப்படத்தை தாயரித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெய சுதா, பிரபு, ஷ்யாம்,சங்கீதா,சம்யுக்தா, பிரகாஷ்ராஜ் சதீஷ், விடி வி கணேஷ், உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வரும் வாரிசு படத்தின் சீற்றம் இன்னும் குறையாமல் உள்ளதால் திரைப்படம் வரும் நாட்களில் விரைவில் ரூ 300 கோடி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

முழுசா வேற மாதிரி இருக்கே... லோகேஷ் கனகராஜின் 'கைதி' இந்தி ரீமேக் – அட்டகாசமான டீசர் இதோ..
சினிமா

முழுசா வேற மாதிரி இருக்கே... லோகேஷ் கனகராஜின் 'கைதி' இந்தி ரீமேக் – அட்டகாசமான டீசர் இதோ..

விசாரணை, விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் - தமிழ் திரையுலகினர் அஞ்சலி..
சினிமா

விசாரணை, விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் - தமிழ் திரையுலகினர் அஞ்சலி..

சினிமா

"அஜித் சாருக்கு கதை இருக்கு.. 8 வருஷமாகியும் அவர Meet பண்ண முடியல" - பிரபல இயக்குனர் வேதனை..