முழுசா வேற மாதிரி இருக்கே... லோகேஷ் கனகராஜின் 'கைதி' இந்தி ரீமேக் – அட்டகாசமான டீசர் இதோ..

கைதி திரைப்படத்தின் இந்தி ரெமேக் போலா டீசர் 2 வெளியீடு - Kaithi remake bhola teaser 2 is out | Galatta

தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாகவும் வித்யாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை நிறைவாக திருப்திப்படுத்திய படம் 'கைதி'. 2019 ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி மிகச்சிறப்பான திரைக்கதை, தொழில்நுட்பம் என்று படம் ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் பேக்கேஜுடன் திரைக்கு வந்து பலருடைய பாராட்டுகளை பெற்று தந்தது. மாநகரம் திரைப்படத்திற்கு பின் பெரிய நட்சத்திரத்துடன் லோகேஷ் இணையும் திரைப்படம் இது.இந்த கைதி திரைப்படமே தற்போது லோகேஷ் கனகராஜின் LCU என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தது. இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக உலக நாயகன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் இருந்தது. கைதியை தொடர்ந்து அதே அளவு ரசனையை விக்ரம் திரைப்படமும் தந்தது. தற்போது LCU பிரிவில் தளபதி விஜய் நடிப்பில் 'தளபதி 67' உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக்  செய்யப்படுகிறது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்து இயக்கியுள்ளார். மேலும் அப்படத்தினை அவரே தயாரித்தும் உள்ளார். தமிழ் கைதி திரைப்படத்தை விட சிறப்பு சேர்ப்பதற்காக போலா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் டீசர் கடந்த மாதம் வெளியானது. கைதி படத்தில் இல்லாத காட்சிகளை சேர்த்து போலா படத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர். மேலும் எதிர்பார்ப்பை ஒருபுறம் எழுப்பினாலும் தமிழில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டீசரில் சூலத்தை  கொண்டு ஓடும் காரை குத்துவதும் பறப்பதும் எதார்த்த அதிரடி காட்சிகளை கொண்ட கைதி திரைப்படத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  எட்ட முடியாமல் போனது. .

தற்போது இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளரை கடந்த போலா டீசரை தொடர்ந்து போலா படக்குழு தங்களது 2 வது டீசரை வெளியிட்டுள்ளனர்.அதிரடி காட்சிகளுடன் மிரட்டும் இந்த  இரண்டாவது டீசர். வித்யாசமான சேசிங் காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளது. அநேகமாக கதாநாயகன் பின்புல கதையையும் சொல்ல வாய்ப்புள்ளது. மேலும் கைதி திரைப்படத்தில் காவலதிகாரியாக வரும் நரேனுக்கு பதில் இதில் பெண் காவலதிகாரியாக நடிகை தபூ வருகிறார். இவருக்கும் கூடுதலாக சுவாரஸ்யமான காட்சிகளையும் வைத்துள்ளனர். மேலும் படத்தின் வில்லன் ஒருவரின் மாஸ் கதையையும் புதிய தோற்றத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்தி திரையுலகிற்கு உரித்தான ஒரு தரமான மசாலா கர்ஷியல் படமாக போலா திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆனால் தமிழில் கொண்டாடி தீர்த்த கைதி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். இதற்கு முன் தமிழில் மெகா ஹிட் அடித்த படங்களான காஞ்சனா 2, ராட்சசன் திரைப்படங்கள் இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டனர். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதிகளவு விமர்சத்தையே பெற்றது.இதை தொடர்ந்து‌ தமிழ் ரீமேக் திரைப்படமாக அடுத்து வரும் போலா திரைப்படத்திற்கு எந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்பதே திரையுலகினரின் தற்போதையே எதிர்பார்ப்பாக உள்ளது.

Jab ek chattaan, sau shaitaanon se takrayega... #BholaaTeaser2 Out Now.

▶️ https://t.co/RgnPhF4nxx#Bholaain3D @ajaydevgn #Tabu @ADFFilms @aseematographer @RaviBasrur @prabhu_sr @RelianceEnt @TSeries pic.twitter.com/M40Hi0g8lb

— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 24, 2023

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!
சினிமா

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!

ராஜமௌலியை ஹாலிவுட்டுக்கு அழைத்த ஜேம்ஸ் கேமரூன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

ராஜமௌலியை ஹாலிவுட்டுக்கு அழைத்த ஜேம்ஸ் கேமரூன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் முழு வீடியோ இதோ..