விசாரணை, விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் - தமிழ் திரையுலகினர் அஞ்சலி..

பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான ஈ ராமதாஸ் மாரடைப்பால் மரணம் - Director and Actor Ramadas passes way | Galatta

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஈ.ராமதாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாகவும் உடல்நல குறைப்பாடு காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். நேற்று இரவு 10 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் . இதனை ராமதாஸ் அவர்களின் மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். அதில் அவர்,

"எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரின் மறைவை திரையுலக பிரபலங்கள்  மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகரும் இயக்குனருமான ஈ. ராமதாஸ் விழுப்புரத்தை சேர்ந்தவர், இவர் சினிமா கனவுடன் சென்னை வந்தவர். ஆரம்பத்தில் தனது வாழ்க்கையை எழுத்தாளராக தொடங்கினார். சங்கமம், கண்ட நாள் முதல் போன்ற பல படங்களுக்கு எழுத்தாளாராக பணியாற்றியவர் இவர். மேலும் மலையாள திரைப்படங்களின் தமிழ் டப்பிங்கிற்காக எழுத்தாளராகவும் எண்ணற்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த வசூல் ராஜா திரைப்படத்தில் இவரது காட்சி இன்றும் பரவலாக பேசப்படும். மேலும் ராமதாஸ் காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!
சினிமா

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!

ராஜமௌலியை ஹாலிவுட்டுக்கு அழைத்த ஜேம்ஸ் கேமரூன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

ராஜமௌலியை ஹாலிவுட்டுக்கு அழைத்த ஜேம்ஸ் கேமரூன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் முழு வீடியோ இதோ..

இரண்டாவது வாரத்தில் ஆட்ட நாயகன் ஆடும் ஆட்டம் – விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..
சினிமா

இரண்டாவது வாரத்தில் ஆட்ட நாயகன் ஆடும் ஆட்டம் – விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..