“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

நடிகர் ராமதாஸ் இறுதி அஞ்சலி செலுத்தினார் இயக்குனர் வெற்றிமாறன் - Director vetrimaran paid his last respect to actor Ram Das | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாகவும் உடல்நல குறைப்பாடு காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இயக்குனர் ஈ. ராமதாஸின் இழப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது வேதனைகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராமதாஸ் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ள நிலையில் திரை நட்சத்திரங்கள் பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர்கள் பாக்யராஜ், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுசீந்திரன், சந்தான பாரதி உள்ளிட்டோரும் நடிகர்களான சதீஷ், பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி கண்களில் நீர் ததும்ப,  ராமதாஸ் எனக்கு 40 வருஷம் பழக்கம், அவர் உதவி இயக்குனரா வேலை பார்த்த போதிலிருந்தே தெரியும். அந்தளவு பழக்கம்.. ‘அண்ணா அண்ணா’ னு என் மேல உயிரா இருப்பான்.." என்று குமுறி அழுதார்

மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் "அவர் என்னை வைத்து ‘இராவணன்’ படம் இயக்கினார்‌.‌ அதன் பின் ‘வாழ்க ஜனநாயகம்’ என்ற படத்தை என் தயாரிப்பில் அவர் இயக்கினார். அரசியல் களத்தில் சவுக்கடியான வசனங்களை அதிரடியா எழுதக்கூடியவர் அவர் நல்ல மனிதர் " என்று குறிப்பிட்டார்.

அதன்பின் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "என்னோட முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர் அவர்.அவர் எனக்கு விசாரணை படத்திலிருந்து இன்னும் நெருக்கமான பழக்கம்.அவர் மிகப்பெரிய நலம் விரும்பி.‌ எதாவது ஒரு விஷயம் னா அவரிடம் பேசுனா அதை எப்படி கையாளலாம் னு சொல்லி கொடுத்து உதவி பண்ணுவாரு.. அவர் இல்லன்றது ஒரு பெரிய இழப்புதான்..என்ன மாதிரி நிறைய பேருக்கு இது பெரிய இழப்பு. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில எனக்கும் பெரிய இழப்பு. எந்த நேரமானாலும் சந்தித்து பேசி, அவருக்கு சரி, தவறு எல்லாம் உரிமையா சொல்ல கூடிய மனிதர். அவர் இல்லாமல் இருப்பது பெரிய இழப்பு தான்" என்றார்.

நடிகரும் இயக்குனருமான ஈ. ராமதாஸ் ஆரம்பத்தில் எழுத்தாளராக தனது வாழ்கையை தொடங்கி  பின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  மேலும் வசூல் ராஜா எம் பி பி எஸ், காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிலம்பரசன்TRன் பக்கா மாஸான பத்து தல… பாடல்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பக்கா மாஸான பத்து தல… பாடல்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு இதோ!

‘கிருட்டு.. கிருட்டு.. இது புது vibe அ இருக்கே..  -  வெளியானது கவினின் 'டாடா' பட பாடல்.. புரோமோ வீடியோ இதோ!
சினிமா

‘கிருட்டு.. கிருட்டு.. இது புது vibe அ இருக்கே.. - வெளியானது கவினின் 'டாடா' பட பாடல்.. புரோமோ வீடியோ இதோ!

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..
சினிமா

“அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கிட்ட கதை இருக்கு” – LCU குறித்து ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ..